» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திங்கள் 17, பிப்ரவரி 2025 5:32:37 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன்  தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், தொழிலாளர் துறை கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலமாக 1111 பயனாளிகளுக்கு ரூ.27,77,600 கல்வி நிதி உதவித் தொகை, 61 பயனாளிகளுக்கு ரூ.12,20,000 திருமண நிதி உதவித் தொகை, 16 பயனாளிகளுக்கு ரூ.8,35,000 இயற்கை மரண உதவித் தொகை, 99 பயனாளிகளுக்கு ரூ.1,18,800 புதிய ஓய்வூதியம் வழங்கிடும் அடையாளமாக இன்று 8 பயனாளிகளுக்கு கல்வி நிதி உதவித் தொகை, திருமண நிதி உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை மற்றும் புதிய ஓய்வூதியம்  பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன்   வழங்கினார்.

பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 474 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்   அறிவுறுத்தினார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 17 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி)  சத்யா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory