» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி: நிர்வாகத்தினர் குற்றச்சாட்டு!

திங்கள் 17, பிப்ரவரி 2025 4:13:21 PM (IST)



தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர் நீக்கப்பட்ட விவகாரம் மூலம் கல்லூரிக்கு சிலர் அவப்பெயர் ஏற்படுத்த முயல்வதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.  

இது தொடர்பாக காரபேட்டை மகமை செயலாளர் விநாயகமூர்த்தி, காமராஜ் கல்லூரி கல்வி குழு பொருளாளர் முத்துசெல்வம் மற்றும் நிர்வாகத்தினர்  இன்று இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி, காமராஜ் மகளிர் கல்லூரி மற்றும் காமராஜ் பள்ளி சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 

சுமார் 5ஆயிரம் மாணவர்கள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரிக்கு அரசால் A+ அங்கிகாரம் தரக்குறியீடு மற்றும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு சேர்ந்த ஒரு மாணவர் வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். 2ஆம் ஆண்டில் கல்லூரி முதல்வரிடம் தகராறு செய்துள்ளார். 3ஆம் ஆண்டில் கல்லூரி செயலாளரை தரக்குறைவாக பேசினார். 

தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து வந்ததால் அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் கல்விக் கட்டணத்தை கண்டித்து போராட்டம் நடத்தியதால் நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆதாய நோக்கம் கொண்ட சிலர் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், தங்களுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் வண்ணம் கல்லூரியில் பயிலும் மாணவர்களை மூளைச்சலவை செய்து வருகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Feb 18, 2025 - 06:54:55 PM | Posted IP 162.1*****

இது ஒரு மத வெறி பிடித்து அலையும் மோசமான கல்லூரி. இங்கு நல்ல முறையில் பணிபுரிந்த கிறித்தவ, முஸ்லிம் பேராசிரியர்களை அவமானப்படுத்தி அவதூறு சொல்லி விஆர்எஸ்சில் வெளியேற வைத்தது கல்லூரி நிர்வாகம்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory