» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:12:29 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆதரவுடன் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019ன் சிறப்பம்சங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் உஷா தலைமை தாங்கினார். எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் கௌரவ செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது :
நுகர்வோருக்கு பில்லே ஆயதம் என்பதால் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பில்லை கேட்டுப் பெற வேண்டும். விழிப்புடன் இருந்து சேவைகளைப் பெற வேண்டும். நாம் பெற்ற சேவைகளிலோ அல்லது பொருட்களின் தரத்திலோ ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை நாட வேண்டும். நுகர்வோரின் நலனை பாதுகாக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்படுகின்றன. நாம் தொடுக்கும் வழக்கிற்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழியாக நிவாரணம் பெறலாம் என்று ஆ.சங்கர் தெரிவித்தார்.
மேலும் இந்தப் பயிற்சியானது 2025 பிப்ரவரி 1 ம் தேதி முதல் தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்று வருகின்றது. கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், ஆழ்வார் திருநகரி, உடன்குடி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், புதூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தமிழக அரசு சார்பில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லபாண்டி, பறக்கும் படை தாசில்தார் செல்வக்குமார், புதுக்கோட்டை தாலுகா வழங்கல் அலுவலர் ஜெயபிரகாஷ், எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை, நுகர்வோர் ஆர்வலர் ஜெயராஜ், எம்பவர் இந்தியா பயிற்றுனர் தீபக், ஆனந்தன் மற்றும்; மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










