» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டை சேதப்படுத்தி, கொலை மிரட்டல்: ஆட்சியரிடம் விவசாயி குடும்பம் புகார்!

திங்கள் 17, பிப்ரவரி 2025 3:55:06 PM (IST)



ஆலந்தா கிராமத்தில் வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் வருவதாக விவசாயி தனது குடும்பத்தினருடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்னர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தா கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் பன்னீர் செல்வம் என்பவர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுலவலகத்தில் அளித்த மனுவில், "நாங்கள் மேற்கண்ட முகவரியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம். எனக்கு சொந்தமான காட்டில் உளுந்து, பருத்தி மற்றும் மக்காசோளம் பயிரிட்டு வருகின்றேன். 

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி எனது உறவினர்கள் பேச்சியம்மாள், முருகலட்சுமி, சுமுத்திர லட்சுமி எனது மகன் மாடசாமி, எனது மகளின் கணவர் பரமசிவன் ஆகியோர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர் எங்களை அடித்து, மிதித்து இரும்பு ராடால் அடித்து, கற்களால் அடித்து துன்புறுத்தினர். 

இதில் காயம் அடைந்த அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துமனைக்கு சென்ற போது அவர்களது வீட்டை வீட்டையும் அடித்து நொறுக்கி உள்ள இருந்த பொருட்கள் அனைத்தையும் சேதபடுத்தி, 16 சவரன் நகை, ரூ.3,25,000 மற்றும் பத்திரங்களையும் எழுத்து சென்றுவிட்டனர். இதில், பரமரிவம் என்பவர் மருத்துவமனையில் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். 

இது தொடர்பாக  20 பேர் மீது புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தொடர்ந்து எங்களது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும்,  தமிழக முதல்வரும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory