» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கேரளாவுக்கு மீன்பிடிக்கச் சென்ற வாலிபர் மாயம்: ஆட்சியரிடம் மனைவி கோரிக்கை!

திங்கள் 17, பிப்ரவரி 2025 3:20:31 PM (IST)



கேரளாவுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன தூத்துக்குடி வாலிபரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி கேவிகே சாமி நகரைச் சேர்ந்த  மாரிமுத்து மனைவி காயத்ரி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு "எனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் மாரிமுத்து தருவைகுளத்தில் உள்ள விசைப்படகில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அவர் கடைசியாக 10.09.24 அன்று தருவைகுளத்தில் இருந்து கிளம்பி கேரள மாநில கடற்கரை பகுதியில் மீன்பிடித் தொழில் செய்ய மேற்படி விசைப்படகில் சக மீனவர்களுடன் புறப்பட்டுச் சென்றார். 

இந்நிலையில் 10.01.2025 அன்று கேரள மாநிலம் கொச்சி கடற்கரை பகுதியில் மேற்படி விசைப்படையில் மீன் பிடிக்கச் சென்று கொண்டிருக்கும் போது கடலில் தவறி விழுந்ததாக கூறப்பட்டது. அப்போது அவர் சண்முகம் என்பவரது செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நாங்கள் கேரள மாநிலம். எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, அதன் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. 

கேரளாவைச் சேர்ந்த கடற்படையினர் தொடர்ந்து தேடி வந்த நிலையில் எனது கணவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் எனது கணவருடன் தொலைந்து போனதாக சொல்லப்பட்ட செல்போன் சுவிட் ஆன் செய்யப்பட்டுள்ளது. செல்போன் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றிய முழு தகவலை எங்களால் அறிய முடியவில்லை. எனவே கேரள மாநிலத்தில் எனது கணவர் மீன் பிடிக்கச் சென்ற தருணத்தில், உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை தீர விசாரித்து, எனது கணவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory