» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் : கிராம மக்கள் கோரிக்கை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 3:05:32 PM (IST)

சிவஞானபுரம் பகுதி கிராம மக்கள் தங்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இலவச வீடு வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து சிவஞானபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் காளீஸ்வரி தலைமையில் சிவஞானபுரம் ஊர் தலைவர் பாலையா, செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள் லிங்கதுரை, வெற்றிவேல், சங்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிம் அளித்த மனுவில், "எங்கள் ஊரில் சமூகத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் குடியிருப்பதற்கு சொந்தமாக வீடு மற்றும் வீடு கட்டுவதற்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லாத நிலையில் ஏராளமானவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவரும் எங்கள் கிராமத்தை சேர்ந்த பத்திரகாளி, ராதா, ராசாத்தி, சாந்தி, அமலசந்திரா உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் சொந்தமாக வீடு கட்டி குடியேறிட ஏதுவாக தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா அல்லது மத்திய, மாநில அரசுகளின் சிறப்புமிகு திட்டமான ‘வீடு வழங்கும் திட்டம்’ அடிப்படையில் ‘இலவச வீடுகள்’ தந்து உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










