» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையில் கிடந்த ஹேண்ட்பேக்கை ஒப்படைத்த பெண்ணுக்கு காவல்துறையினர் பாராட்டு!
திங்கள் 17, பிப்ரவரி 2025 1:01:11 PM (IST)

திருச்செந்தூரில் சாலையில் கிடந்த ஹேண்ட்பேக்கை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பகுதியில் வசித்து வரும் தங்கவேல் என்பவரது மகன் லிங்கம் (40) இவர் முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு வளைகாப்பு நிகழ்சிக்கு வந்துள்ளார். வரும் வழியில் அவரது கைப்பையை தொலைத்துவிட்டார். பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு கிடைக்காததால் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு சென்றார்.
பின் முத்தையாபுரம் எம். தங்கம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி சமுத்திரகனி (40). கூலி வேலை செய்துவரும் இருவர் சாலையில் கிடந்த ஹேன் பேக்கை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதில், ரூ.4000 பணமும், 1 ஜோடி வெள்ளி வளையலும் இருந்தது. மேலும் கைப்பை தொலைத்த நபர்களுக்கு தகவல் தெரிவித்து காவல் நிலையம் வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சமுத்திரகனியின் நேர்மையை பாராட்டி அவருக்கு காவல்துறையினர் சால்வை அணிவித்து கெளரவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










