» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பணிமணை மேலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை: தமிழக முதல்வருக்கு கிராம மக்கள் கோரிக்கை
திங்கள் 17, பிப்ரவரி 2025 12:38:30 PM (IST)

திருவைகுண்டம் பணிமணை மேலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர்கள் முதலமைச்சர் தனி பிரிவுக்கு அளித்த மனு "சேர்வைக்காரன்மடம் ஊராட்சி வழியாக அரசு பேருந்துகள் திருவைகுண்டம் பேருந்து பணிமனையில் இருந்தும் இயக்கப்படுகிறது.மேற்படி எங்கள் ஊராட்சி வழியாக திருவைகுண்டம் பணி மேடையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் சரிவரி இயக்கப்படுவதில்லை என பலமுறை மனு அளித்து உள்ளோம்.
இந்த பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் சரியான பேருந்து எண்களில் இயக்க படுவதில்லை.நினைத்த நேரத்திற்கு வருகிறது. சுமார் 40 வருடங்களாக இயக்கப்படும் 147A பேருந்து மற்றும் 147 சரியாக இயக்க படுவதில்லை. மாறாக அதே பேருந்து எண்ணில் இருந்து தூத்துக்குடி பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் செல்லுகிறது.
எம் ஊராட்சி வியாபாரிகள் வயதான ஆஸ்பத்திரி செல்லும் மக்கள் மற்றும் பொதுமக்கள் 147A பஸ்ஸில் ஏறி உட்கார்ந்திருக்கும் நிலையில் எமது ஊருக்கு போகாது என இறக்கிவிட படுகின்றனர். மேலும் இந்த பணிமனையில் இருந்து இயக்கப்படும் கோயமுத்தூர் சென்று திரும்பும் பேருந்துகள் எம் ஊராட்சி வழியாக வருவதில்லை. மாறாக பேய்குளம் மற்றும் வாகைகுளம் வழியாக திருப்பி விடப்படுகின்றன.மேலாளரே எம் ஊராட்சி வழியாக செல்லும் பேருந்துகளை மாற்று தடத்தில் இயக்க டிரைவரை நிர்பந்திக்கும் போது டிரைவர்கள் அவரவர் விருப்பம் போல் பேய்குளம் வழியாக வண்டியை இயக்குகின்றனர்.
முதல்வர், அலைக்கழிக்கபடும் மற்றும் உரிமைகள் மறுக்கப்படும் எம் ஊராட்சி மக்களின் நிலை கருதி பலமுறை சொல்லி கேட்காத செவிமடுக்காமல் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் திருவைகுண்டம் பணி மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பணியிடை நீக்கம் செய்யவேண்டும். மேலும் நேற்று 147A என்ற பேருந்து தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் வழியாக இயக்கப்பட்ட படத்தை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இது வரை அளித்த மனுக்களை ஆய்வு செய்யவேண்டும் என மனு அளித்தனர்.
மேலும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களை திரட்டி தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் எங்கள் ஊர் வழியாக வேறு வழியாக திருப்பபடும்போது பஸ் உள்ளிருக்கும் போராட்டம் நடத்தி திருவைகுண்ட பணி மேலாளர் அவல நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டுவருவவோம். சங்கரன்கோவில் பஸ் காலையில் எமது வழித்தடத்தில் இருந்து மாறி பேய்குளம் வழியாக மாறி வந்தால் கூட்டாம்புளி பஸ் நிறுத்தத்தில் ஊர் மக்கள் சார்பாக தடுத்தி நிறுத்தி இந்த அவல நிலையை மாவட்ட ஆட்சியர் கவனம் கொண்டு செல்வோம் என கூறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










