» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது : கனிமொழி எம்பி பேட்டி

திங்கள் 17, பிப்ரவரி 2025 10:21:14 AM (IST)



"இது ஒரு ஜனநாயக நாடு. எந்த நிதியையும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்லும் உரிமை மத்திய அரசுக்கு கிடையாது" என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆயிரம்பிறை பூங்கா முதியோர் மகிழ்விப்பிடத்தை கனிமொழி எம்பி இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்க சட்டத்தில் இடம் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது குறித்து கருத்து செய்தியாளர்கள் கேட்டதற்கு "எந்த நிதியையும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்லும் உரிமை மத்திய அரசுக்கு கிடையாது. இது ஒரு ஜனநாயக நாடு. மாநிலங்களுக்கு உரிமை இருக்கிறது.

தமிழகம் எக்ஸ்டல் பெடரல் ஸ்டேட். மத்திய அரசுதான் அடிக்கடி கோ ஆப்ரேட்டிவ் ஃபெடரலிசம் என்கின்றனர். பிறகு ஒன்றிய அரசு கோ ஆப்பரேட் பண்ணாமலே ஃபெடரலிசம் இருப்பதற்கு வாய்ப்பு கிடையாது. தமிழ்நாட்டு மக்களுடைய போர்க்குணம் எந்த அளவுக்கும் குறைந்து விடவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொது பட்டியலில் இருக்கக்கூடிய கல்விக் கொள்கையை மத்திய அரசு மாநிலங்களின் மீது தொடர்ந்து திணித்துக் கொண்டிருக்கிறார்கள் 

எல்லா வரியும் ஜிஎஸ்டி வழியாக வசூல் செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் தர முடியாது. நாங்கள் சொல்லக்கூடிய அத்தனை விஷயங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி நிர்பந்தங்களை, திணிப்புகளை நம் மீது செய்து கொண்டுள்ளனர் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். 

தமிழக அரசை பார்க்கக் கூடாது தமிழக மக்களை பார்த்து புதிய கல்விக் கொள்கைக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எல்லோரும் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றோம். தமிழ்நாடு அரசை பார்க்க வேண்டும் என்று எடப்பாடி சொல்வது தமிழ்நாடு அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதை எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும் என்றார். 

இந்நிகழ்வில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory