» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:38:35 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விடுமுறை நாளான இன்று பக்தர்கள் கூட்ம் அலைமோதியது. சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாக, சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது முக்கிய பிரபலங்கள், அரசியல் கட்சியினர், சினிமா நடிகர்கள், நடிகைகள் என ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார். 

இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை தினம் என்பதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மட்டு மல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு உச்சி கால அபி ஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory