» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நகராட்சி துறைக்கு ஆண்டுதோறும் ரூ.25,000 கோடி நிதி: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சனி 15, பிப்ரவரி 2025 8:43:00 PM (IST)

தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் நகராட்சி துறைக்கு ஆண்டுதோறும் 25,000 கோடி ரூபாய் நிதியை தந்து அனைத்து நகராட்சி பகுதிகளுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை கட்டிடத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (15.2.2025) தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்துபார்வையிட்டு பல்வேறு துறைகளின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட ரூ.2093.52 இலட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இந்நிகழச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்த்தாவது:- நமது நகராட்சி நிர்வாகத்துறையின் அமைச்சராக நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு முறை இருந்துள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மேயராகவும் இருந்தவர். இன்றைக்கு இந்த இடத்திலே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரிலே அமைக்கப்பட்ட இந்த சந்தையானது ரூ.6 கோடியே 87 லட்சம் செலவிலே கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்செந்தூரில் நகராட்சி நிர்வாகத் துறை கட்டிடமானது ரூ.3.50 கோடி செலவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரில் குளச்சல் நகராட்சியில் ரூ.5.55 கோடி செலவில் பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடியே 25 இலட்சம் செலவில் திறக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் நகராட்சி வார சந்தையானது ரூ.2 கோடியே 76 இலட்சம் செலவில் திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டு புதிய நூலகக் கட்டிடம், புதிய உணவு தானியங்கிக் கட்டிடம் என அனைத்தும் இங்கே திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் மதுரையில் தென்மாவட்டத்தில் உள்ள 11 நகராட்சி தலைவர்கள், மேயர் பெருமக்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களை அழைத்து இந்த ஆண்டு சட்டமன்றத்திலே உங்கள் தொகுதியிலே எந்த பணிக்கு முன்னுரிமை தந்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று ,நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று மதுரையிலிருந்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நான் சேர்மனாக இருந்த பொழுது அப்போதைய ஒன்றிய அரசோ, மாநில அரசோ ஒரு ஊராட்சிக்கோ பேரூராட்சிக்கோ நிதி தருவதென்றால் வருடத்திற்கு ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 13 அல்லது 14 லட்சம் தான் வழங்கப்படும். பேரூராட்சி என்று சொன்னால் இரண்டு அல்லது மூன்று லட்சம் தான் நிதி தருவார்கள்.
ஆனால், இந்த சூழ்நிலையில் மாற்றும் வண்ணம் நம் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் இந்த நகராட்சி துறைக்கு ஆண்டுதோறும் 25,000 கோடி ரூபாய் நிதியை தந்து அனைத்து நகராட்சி பகுதிகளுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்கள். அதனால்தான் புதிய கட்டிடங்கள், பேருந்து நிலையங்கள், வார சந்தைகள், மார்க்கெட் பகுதியில் மழைநீர் வடிகால், கழிவறை போன்றவை கட்டப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதிகளிலும் மாநகராட்சி பகுதியிலும் வசிக்கும் மக்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் நகராட்சி துறை மூலம் செய்து கொடுக்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு மட்டும் ரூ.350 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகர்கோவிலுக்கும் தரப்பட்டுள்ளது. இதைக் காட்டிலும் சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் கலைஞர் தான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை 1972 ஆம் வருடம் உருவாக்கினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்றது முதல் ரூ. 30,000 கோடி செலவில் இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு மட்டும் ரூ.573 கோடி தரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி 1, நகராட்சியில் 3, பேரூராட்சிகள் 18 சேர்த்து ரூ.1167 கோடி இந்த மூன்றாண்டு காலத்தில் தரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சி 1, நகராட்சிகள் 4, பேரூராட்சிகள் 51 ரூ.1229 கோடியே 39 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தான் அத்தனை இடங்களிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி நகராட்சியில் இந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த வார சந்தையானது மிகச் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் அனைத்து கடைகளும் ஏலம் எடுக்கப்பட்டு ரூ.1 கோடியே 35 இலட்சத்திற்கு மாதந்தோறும் வாடகையாக நகராட்சிக்கு வர இருக்கிறது. இன்னும் 15 கடைகள் பாக்கி இருக்கிறது. நீங்கள் எல்லாரும் பார்த்து இருப்பீர்கள். எல்லா இடத்திலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
சென்னையில் சுமார் 1000 புதிய கழிவறைகள், ஸ்வச் பாரத் மூலமாக மக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.எனவே தான் நகராட்சி துறையில் எந்த பணி என்று சொன்னாலும் நம்முடைய முதலமைச்சர் நிதி உடனடியாக தருகிறார்கள். இப்படி சிறப்பாக செய்து வரும் நமது முதலமைச்சர் அவர்களின் ஆட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும். அவருக்கு என்றும் ஆதரவாக இருப்போம் என்று சொல்லி நல்ல முறையிலே இந்த கட்டிடத்தை கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததற்காக நகர் மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக இயக்குநர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை சு.சிவராசு, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, நகர்மன்றத் தலைவர்கள் கா.கருணாநிதி (கோவில்பட்டி), சிவஆனந்தி (திருச்செந்தூர்), மேயர்கள் பெ.ஜெகன் (தூத்துக்குடி), ரெ.மகேஷ் (நாகர்கோயில்), மண்டல இணை இயக்குநர், நகராட்சி நிர்வாகம், திருநெல்வேலி பெ.விஜயலெட்சுமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் கா.மகாலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










