» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மிக எளிய முறையில் மருத்துவ குணம் கொண்ட “மைக்ரோகிரீன்” வளர்ப்பு முறை!!

சனி 15, பிப்ரவரி 2025 8:16:14 PM (IST)



நம்முடைய பொன்னான நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு வீட்டிலேயே குறைந்த செலவில் அதிக மருத்துவ குணம்கொண்ட "மைக்ரோகிரீன்” என்னும் "பேபி” கீரையை மிக எளிமையான முறையில் வீட்டில் வளரப்பது பற்றிய இலவச ஆலோசனைகளை விளக்கத்தை கோவில்பட்டி, மேளாள் வேளாண் கல்வி ஆசிரியர் கோ. சுரேஷ்குமார் கூறியுள்ளதாவது...

பொதுவாக கீரைகள் நமது அன்றாட உணவில் பெரும் பங்கு வகிக்கிறது. இலைக் காய்கறி வகையை சேர்ந்தது. இவற்றின் இலைகளும், தண்டுகளும் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் சி போன்ற சத்துகளை அதிக அளவில் கொண்டுள்ளன. மேலும் கீரைகளில் புரதம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை உள்ளன. நமது அன்றாட உணவில் குறைந்தபட்சம் 100 கிராம் பச்சை இலைக் காய்கறிகளை உணவியல் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் கீரை வகைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. 

குறைந்த காலத்தில் வளர்ச்சி கொண்ட கீரைகளை படித்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் குடும்ப பெண்கள் ஒரு குறைந்த இடத்தில் வீட்டின் உட்புறங்களிலோ அல்லது வெளிப்புறங்களிலோ சிறிய குடில் அமைத்து சிரமமின்றி எளிதாக வளர்க்கலாம். அதே நேரத்தில் நல்ல முழுமையான ஈடுபாடு இருந்தால் இதை சுயதொழிலாகவும் நாம் மாற்றலாம். நல்ல வருமானம் ஈட்டலாம். எனவே நம் அன்றாட வீட்டிற்கு தேவையான "பேபி”கீரைகளை வளர்த்து நம் ஆரோக்கியத்தை நாமே மீட்டு எடுப்பதற்கு சில மணி நேரத்தை நல்ல பயனுள்ளதாக மாற்றி நமது குடும்ப உறுப்பினர்கள் உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory