» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்களுக்காகத் திட்டங்களை வழங்கி வருகிறார் முதல்வர் : கனிமொழி எம்.பி., பேச்சு

சனி 15, பிப்ரவரி 2025 7:58:19 PM (IST)



மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட உச்சரிக்கப்படாத நிலையிலும், முதலமைச்சர் மக்களுக்காகத் திட்டங்களை வழங்கிக் கொண்டு இருக்கின்றார் என கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி பேசினார். 

கலைஞர் மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.6.87கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாகக கட்டி முடிக்கப்பட்டுள்ள கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஆகியோர் திறந்து வைத்தனர். தற்போது புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நகராட்சி தினசரி சந்தையானது சுமார் 154 கடைகளைக் கொண்டிருக்கிறது. 

இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகதுறை இயக்குநர் சு.சிவராசு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: நீண்ட நாளாக பழுதடைந்து இருந்த இந்த சந்தை மக்களுடைய கோரிக்கையை ஏற்று அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முதலமைச்சாரும், ஒரு புதிய சந்தையை பல வசதிகளோடு ரூ. 6 கோடிக்கு மேல் மதிப்பீட்டில் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். 

நம்முடைய முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டித் தந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இருக்கக்கூடிய சகோதரிகளுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், இது பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தரக்கூடிய ஆட்சி. மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், மேலும் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய பெண் குழந்தைகள் கல்லூரிக்கு சென்று படிக்கும் போது அவர்களுடைய கல்வி தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகப் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு இருக்கின்றார்.

கல்லூரியில் படிக்கும் இளைஞர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் வழியாக ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் வழங்கிக் கொண்டிருக்கிறார். முதல் முதலாகத் தமிழ்நாட்டில் தான், மதிய உணவுத் திட்டம் என்பது தொடங்கப்பட்டது. தமிழகத்தை பார்த்துத்தான் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கக்கூடிய திட்டத்தை மற்ற மாநிலங்களும், ஒன்றிய அரசும் நிறைவேற்றி இருக்கிறது.

அதேபோல், பள்ளிக்கூடத்திற்கு வரக்கூடிய நம்முடைய வீட்டுப் பிள்ளைகளுக்குக் காலை உணவுத் திட்டத்தை உருவாக்கி, மேலும் அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட உச்சரிக்கப்படாத நிலையிலும், ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் மக்களுக்காகத் திட்டங்களை வழங்கிக்கொண்டு இருக்கின்றார்.  தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர் கே.என்.நேருவிடம் வைத்திருக்கிறோம். நிச்சயமாக விரைவில், கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்து இருக்கின்றார் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக இயக்குநர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை சு.சிவராசு, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, நகர்மன்றத் தலைவர்கள் கா.கருணாநிதி (கோவில்பட்டி), சிவஆனந்தி (திருச்செந்தூர்), மேயர்கள் பெ.ஜெகன் (தூத்துக்குடி), ரெ.மகேஷ் (நாகர்கோயில்), மண்டல இணை இயக்குநர், நகராட்சி நிர்வாகம், திருநெல்வேலி பெ.விஜயலெட்சுமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் கா.மகாலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory