» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை எதிரொலி : விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு..!!
சனி 21, டிசம்பர் 2024 12:28:34 PM (IST)
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை எதிரொலியாக தூத்துக்குடி - சென்னை உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து , தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர் ஆகிய உள்நாட்டு விமான கட்டணங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
விடுமுறை நாட்களில் விமானக் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளதால் முன்பதிவு செய்ய இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் விவரங்கள் பின்வருமாறு,
உள்நாட்டு விமான கட்டணங்கள்
- சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம் – ரூ. 4,796, இன்றைய – கட்டணம் ரூ. 14,281,
- சென்னை – மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,300, இன்றைய – கட்டணம் ரூ. 17,695,
- சென்னை -திருச்சி இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.2,382; இன்றைய கட்டணம் ரூ.14,387 ஆக அதிகரிப்பு
- சென்னை – மைசூரு இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.3,432; இன்றைய கட்டணம் ரூ.9,872ஆக அதிகரிப்பு.
- சென்னை – கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,485; இன்றைய விமான கட்டணம் ரூ.9,418ஆக அதிகரிப்பு.
- சென்னை – சேலம் வழக்கமான கட்டணம் ரூ .3,537; இன்றைய கட்டணம் ரூ.8,007ஆக அதிகரிப்பு.
- சென்னை திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.3,821; இன்றைய கட்டணம் ரூ.13,306ஆக அதிகரிப்பு.
- சென்னை -கொச்சி இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.3,678; இன்றைய கட்டணம் ரூ.18,377ஆக அதிகரிப்பு.
சர்வதேச விமான கட்டணங்கள்
- சென்னை – சிங்கப்பூர் இடையே வழக்கமான கட்டணம் ரூ.7,510; இன்றைய கட்டணம் ரூ.16,861 ஆக அதிகரிப்பு.
- சென்னை – கோலாலம்பூர் இடையே வழக்கமான கட்டணம் ரூ.11,016; இன்றைய கட்டணம் ரூ.33,903ஆக அதிகரிப்பு.
- சென்னை – தாய்லாந்து வழக்கமான கட்டணம் – ரூ.8,891, இன்றைய – கட்டணம் ரூ.17,437.
- சென்னை- துபாய் வழக்கமான கட்டணம் – ரூ.12,871, இன்றைய கட்டணம் – ரூ. 26,752. தொடர் விடுமுறையால் சர்வதேச விமானம், உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம், பல மடங்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மக்கள் கருத்து
இது தான்Dec 21, 2024 - 12:36:45 PM | Posted IP 172.7*****
பகல் கொள்ளை, யாரும் கண்டுக்கமாட்டாங்க ஏன் என்றால் அரசியல்வாதிகள் எல்லோரும் பெரிய பணக்காரர்களே.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)











podhu janamDec 21, 2024 - 05:53:30 PM | Posted IP 162.1*****