» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
சனி 25, மே 2024 4:04:08 PM (IST)

தூத்துக்குடி வாகைகுளம் புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கான இம்மையிலும் மறுமையிலும் பலன்தரக் கூடிய வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
இப்பயிற்சியில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண் பாபு, பொதுமேலாளர் (வளர்ச்சி) ஜெயக்குமார், பொதுமேலாளர் (நிர்வாகம்) கிருஷ்ணகுமார், ஸ்காட் கல்விக் குழும திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளின் இயக்குநர் சி.கே. இரவி சங்கர், முதல்வர் ஜாஸ்பர் ஞான சந்திரன், மாணவர் சேர்க்கை இயக்குநர் ஜான் கென்னடி, இயக்குநர் ஜார்ஜ் கிளிண்டன், நிர்வாக அதிகாரிகள் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஆழியார் அறிவு திருக்கோவில் பேராசிரியர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியருமான பொறியாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அவர் தனது சிறப்பு உரையில் மாணவர்கள் இளம்பருவத்தில் கற்கும் வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இம்மையிலும் மறுமையிலும் நிச்சயம் பலன் தரும். உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியம், மன அமைதி, அதிக மதிப்பெண் தேர்ச்சி பெறுதல், பக்குவம் அடைந்த பண்பாடான வாழ்க்கை போன்ற நற்பலன்கள் இத்தகைய வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற முடியும் என்று குறிப்பிட்டார்.
பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை திறன் மேம்பாட்டு துறை அதிகாரிகள் ஜோ பேட்டரிக் ஞானராஜ், பாலின் விசு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புன்னக்காயலில் ரூ.32 கோடி மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் : ஆட்சியர் ஆய்வு!
புதன் 15, ஜூலை 2026 12:37:42 PM (IST)

தூத்துக்குடியில் காமராஜ் பிறந்தநாள் விழா: திமுக, பாஜக, அரசியல் கட்சியினர் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 12:05:30 PM (IST)

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி கொலை வழக்கில் 5பேர் கைது!
புதன் 15, ஜூலை 2026 11:04:16 AM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில நபர் உயிரிழப்பு
புதன் 15, ஜூலை 2026 10:55:22 AM (IST)

தமிழகத்தில் முழு மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும்: முதல்வர் விஜய்க்குச் சகோ.மோகன் சி. லாசரஸ் கோரிக்கை!
புதன் 15, ஜூலை 2026 10:48:40 AM (IST)

தூத்துக்குடியில் அரசு மருத்துவர் தற்கொலை : வீடியோ காலில் மனைவியுடன் பேசிவிட்டு விபரீத முடிவு!
புதன் 15, ஜூலை 2026 10:42:51 AM (IST)








