» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பறக்கும் படை சோதனையில் ரூ.4.20 லட்சம் பறிமுதல் : பறக்கும் படையினர் நடவடிக்கை!

வியாழன் 28, மார்ச் 2024 8:47:30 PM (IST)



தூத்துக்குடியில் பறக்கும் படை சோதனையில் இன்று ஒரே நாளில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது‌.  இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் வந்த அஜய் என்பவர் உரிய ஆவணம் இன்றி மூன்று லட்சத்து 61,200 கொண்டு சென்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தூத்துக்குடி துணை தாசில்தார் ரம்யாதேவி ஒப்படைத்தனர். இதே போல் எட்டையாபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அனுமதி இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60,000 பறிமுதல் செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் ரேஷன் கடை ஊழியர் பலி

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 10:04:21 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory