» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் 43 போ் மனு தாக்கல்!

வியாழன் 28, மார்ச் 2024 8:11:19 AM (IST)

தூத்துக்குடி மக்களவைத் தோ்தலில் போட்டியிட மொத்தம் 43 போ் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மக்களவைத் தோ்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான கடந்த 20ஆம் தேதி 2 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர். 25ஆம் தேதி அதிமுக வேட்பாளா் ஆா். சிவசாமி வேலுமணி, 26ஆம் தேதி திமுக வேட்பாளா் கனிமொழி ஆகியோா் மனு தாக்கல் செய்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை வரை 20போ் மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையில், கடைசி நாளான நேற்று புதன்கிழமை, தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் எஸ்.டி.ஆா். விஜயசீலன் மனு தாக்கல் செய்தாா். மாற்று வேட்பாளராக அவரது மனைவி ரீனா சீலன் மனு தாக்கல் செய்தாா். மேலும் நாம் இந்தியா் கட்சி வேட்பாளா் என்.பி. ராஜா, சுயேச்சை வேட்பாளா்கள் ஆா். அருணாதேவி, எஸ்.எம். காந்தி மல்லா் உள்ளிட்ட 23 போ் ஒரே நாளில் மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் விபரங்கள்

1. 20.03.2024 ஜெ.சிவனேஷ்வரன் சுயேட்சை

2. 20.03.2024 ந.ராதாகிருஷ்ணன் சுயேட்சை

3. 21.03.2024 ஏதுமில்லை  

4. 22.03.2024 து.ஜெயகணேஷ் / 2 வேட்பு மனுக்கள் நாம் இந்தியர் கட்சி

5. 22.03.2024 செ.ஜெயகுமார் / 2 வேட்பு மனுக்கள் சுயேட்சை

6. 22.03.2024 த.பொ.சீ.பொன்குமரன் சுயேட்சை

7. 23.03.2024 சனிக்கிழமை அரசு விடுமுறை 

8. 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை 

9. 25.03.2024 ரா.பாலமுருகன் சுயேட்சை

10. 25.03.2024 மு.பிரசன்னகுமார்  சுயேட்சை

11. 25.03.2024 ரா.சிவசாமி வேலுமணி அ.இ.அ.தி.மு.க.

12. 25.03.2024 எஸ்.ஆனந்திபிரபா, மாற்று வேட்பாளர் அ.இ.அ.தி.மு.க.

13. 25.03.2024 இரா.கலீர் முருக பாவேந்தன் மக்கள் நல்வாழ்வு கட்சி

14. 25.03.2024 பேராயர் டாக்டர் காட்ப்ரே நோபுள் / 3 வேட்பு மனுக்கள் அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்

15. 26.03.2024 கனிமொழி / 3 வேட்பு மனுக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்

16. 26.03.2024 ரா.வேல்சாமி, மாற்று வேட்பாளர்  திராவிட முன்னேற்றக் கழகம்

17. 26.03.2024 அ.மாணிக்கராஜ் பகுஜன் சமாஜ் கட்சி

18. 26.03.2024 முத்துகேசவன் அறவோர் முன்னேற்றக் கழகம்

19. 26.03.2024 ரொவினா ரூத் ஜேன்.ஜா/ 3 வேட்பு மனுக்கள் நாம் தமிழர் கட்சி

20. 26.03.2024 க.சண்முகசுந்தரம் / 2 வேட்பு மனுக்கள் பகுஜன் திராவிட கட்சி

21. 26.03.2024 பீ.ஜேம்ஸ் சுயேட்சை

22. 26.03.2024 சா.சித்திரை ஜெகன் சுயேட்சை

23. 26.03.2024 இரா.ஜெயபால் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி 

24. 27.03.2024 விஜயசீலன் /  2 வேட்பு மனுக்கள் தமிழ் மாநில காங்கிரஸ்

25. 27.03.2024 பொன்ராஜ் சுயேட்சை

26. 27.03.2024 ரீனா சீலன், மாற்று வேட்பாளர்  தமிழ் மாநில காங்கிரஸ் 

27. 27.03.2024 கோ.கண்ணன்  சுயேட்சை

28. 27.03.2024 தேவபிரான்  சுயேட்சை

29. 27.03.2024 சு.அருணாதேவி   சுயேட்சை

30. 27.03.2024 ஆ.காந்தி  சுயேட்சை

31. 27.03.2024 ப.பெருமாள் குமார்  புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி

32. 27.03.2024 பெ.சுடலைமுத்து  சுயேட்சை

33. 27.03.2024 ராதாகிருஷ்ணன்  அகில பாரத இந்து மகா சபா கட்சி

34. 27.03.2024 சாமுவேல்  சுயேட்சை

35. 27.03.2024 N.P.ராஜா  நாம் இந்தியர் கட்சி

36. 27.03.2024 டேவிட் ஜெபசீலன்  சுயேட்சை

37. 27.03.2024 இசக்கி ராஜா  சுயேட்சை

38. 27.03.2024 செல்வமுத்துக்குமார்   சுயேட்சை

39. 27.03.2024 செந்தில்குமார்  சுயேட்சை

40. 27.03.2024 கிருஸ்ணன்  சுயேட்சை

41. 27.03.2024 ஏ.இசக்கிமுத்து  சுயேட்சை

42. 27.03.2024 ஜெ.அனுசியா  நாம் தமிழர் கட்சி

43. 27.03.2024 ராதாகிருஷ்ணன  சுயேட்சை

44. 27.03.2024 சரவணன்   தெலுங்கு ஜனசேவா சேனா கட்சி

45. 27.03.2024 ஆ.தினகரன் சுயேட்சை

46. 27.03.2024 அம்புரோஸ்  இந்திய கிருஸ்துவ முன்னனி கட்சி

 மொத்தம் 43 வேட்பாளர் / 53 வேட்பு மனுக்கள் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory