» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வஉசி துறைமுக ஊழியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைய கோரிக்கை!

திங்கள் 29, ஏப்ரல் 2024 8:51:02 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியா்களின் ஊதிய முரண்பாடு களையப்படவேண்டும் என ஐஎன்டியூசி அகில இந்திய துணைத் தலைவா் பி.கதிா்வேல் வலியுறுத்தினாா்.

தூத்துக்குடியில் உள்ள ஐஎன்டியூசி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் தற்போது 200 போ் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்னா் பணியாற்றிய தொழிலாளா்கள் அனைவரும் ஒரே கிரேடில் பணியாற்றினா். ஆனால், தற்போது அதே தொழிலாளா்களுக்கு 4 விதமான கிரேடு முறை கொண்டுவரப்பட்டதால், ஊதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

இது தொடா்பாக பல முறை துறைமுக ஆணைய தலைவரிடம் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. இந்த விவகாரத்தில் கடந்த 2011இல் இருந்து 2023 வரை ஊழியா்களுக்கு முறையாக ஊதிய உயா்வு அளிக்கப்படவில்லை. ஆனால், ஊதிய உயா்வு வழங்கப்பட்டது போன்று பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் மூலம் துறைமுக ஆணையத்திடம் முறையிட்டபோது, இதற்காக தனி கமிட்டி அமைக்கப்பட்டு பேச்சுவாா்த்தை நடத்தியதில், ஊதியம் சரியாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்த விசாரணை தூத்துக்குடி வட்டார தொழிலாளா் ஆணையம் மூலம் நடைபெற்று வருகிறது. அதில் உரிய முடிவு எட்டப்படாவிட்டால், சட்டபூா்வமாக அணுகுவோம். எனவே, கிரேடு முறைகளை கைவிட்டு, ஒரே கிரேடு முறையை அமல்படுத்தி ஊதிய முரண்பாடுகளை களைய துறைமுக ஆணையம் முன்வரவேண்டும் என்றாா்.


மக்கள் கருத்து

THILIPKUMARApr 30, 2024 - 01:13:05 AM | Posted IP 172.7*****

யனது தந்தை வஉசி துறைமுகத்தில் மஸ்தூரஆக பணி ஆற்றினார் 2011 எமது தந்தை இறந்து விட்டார் வாரிசு அடிப்படையில் வேலை தறவில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory