» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
புதன் 29, நவம்பர் 2023 4:43:04 PM (IST)

குரும்பூர் அருகே பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரையில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் 2வது செவ்வாய் கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடந்து வருகிறது. அதேபோல் கார்த்திகை மாத திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில் கலந்து கொண்ட பெண்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் வழிபட்டனர். இதில் மதுரை, நெல்லை, திருச்செந்தூர், குரும்பூர், ஆழ்வார்திருநகரி, ஏரல், தென்திருப்பேரை, நாசரேத், சாத்தான்குளம், ஆறுமுகநேரி, காயல்பட்டிணம், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் கோயில் தர்மகத்தா ஜெயராகவன், விஜயராகவன், ஐஓபி முருகன், நாசரேத் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)










