» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூருக்கு பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள் : பொதுமக்கள் பக்தி பரவசம்!!

வியாழன் 13, ஜனவரி 2022 5:17:22 PM (IST)



திருச்செந்தூர் கோவிலுக்கு அந்தரத்தில் தொங்கியபடி வாயில் அலகு குத்தி பறவைக் காவடி சென்ற பக்தர்களை கண்டு பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தைப்பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரை யாகவும், பஸ், ரயில்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த ஆண்டு வெள்ளிகிழமை தை பொங்கலும் அதை தொடர்ந்து வருகிற செவ்வாய் கிழமை தை பூசத்திருவிழாவும் நடைபெறுகிறது. 

இதற்கிடையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தை பூசத்திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இன்றைக்குள் கோயிலுக்கு சென்று திரும்பி வர ஏற்பாடு செய்து வருகின்றனர். நடைபயணம் செல்லும் பக்தர்கள். அலகு குத்தி செல்லும் பக்தர் காவடி எடுத்து செல்லும் பக்தர்கள், சர்ப்ப காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் என அனைவரும் இன்றைக்குள் கோயிலுக்கு சென்று சேர முடிவு செய்துள்ளனர். 

இதற்கிடையில் தென்காசி மாவட்டம் குருக்கல் பட்டியில் இருந்து பக்தர் இருவர் பறவைகாவடி எடுத்து வந்தார். வாகனத்தில் அந்தரத்தில் முதுகில் கொக்கி மாவட்ட தொங்கியபடி வந்த அந்த பக்தரை அனைவரும் பக்தியுடன் வணங்கினர். அதன் பக்தர்களோடு பறகை காவடி எடுத்து சென்ற நபர் திருச்செந்தூரை நோக்கி சென்றனர்.முருகனை காண தன்னை வருத்தி செல்லும் பக்தர்களுக்கு இந்த வருடம் தொடர் கொரோனா பிரச்சனையால் தை மற்றும் தை பூசத்தில் செல்ல இயலாவிட்டாலும் கூட கண்டிப்பாக நேர்ச்சையை நிறைவேற்ற முதல் நாளே சென்று தங்கள் நேர்ச்சையை நிறைவேற்றி உள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory