» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா தன்னிறைவு : பிரதமர் மோடி பேச்சு!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 10:35:54 AM (IST)



அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டு 90வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது, தொழில்முறை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் முழுவதும் ஒரு அடையாளத்தை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் அடுத்த பத்தாண்டுகளை வடிவமைக்கும் வகையில் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2014 காலகட்டத்தில் பலவீனமான நிலையில் இருந்த வங்கி அமைப்பு தற்போது லாபகரமாக இயங்குகின்றன. தெளிவான கொள்கைகளே இந்த மாற்றத்திற்குக் காரணம். பொதுத்துறை வங்கிகளுக்கு உதவுவதற்காக ரூ. 3.5 லட்சம் கோடியை அரசு மூலதனமாக அளித்துள்ளது. பல நாடுகளின் தனியார் துறை கடன், அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்கியுள்ளது. இது குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.

அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத பங்களிப்புடன், உலக வளர்ச்சியின் இயந்திரமாக இந்தியா மாறி வருகிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory