» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அமித்ஷா!

திங்கள் 29, ஏப்ரல் 2024 5:35:09 PM (IST)



மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் புறப்பட்ட சில வினாடிகளில் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய மந்திரி அமித்ஷா நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பீகார் மாநிலம் பெகுசாராய் என்ற பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு அமித்ஷா ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டார். ஹெலிகாப்டர் புறப்பட்டபோது மேலே செல்ல முடியாமல் அந்தரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது.

சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் சீராக வானில் பறந்தது. சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், பின்னர் சீராக இயங்கியதால், அதிர்ஷ்டவசமாக அமித்ஷா உயிர் தப்பினார். தொழில் நுட்பக்கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் சிறிதுநேரம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது காற்று காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory