» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை: பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கை!

புதன் 1, மே 2024 12:47:22 PM (IST)



ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று மாநில சட்டசபை தேர்லுக்காக பா.ஜனதா கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜனதா ஆகியவை கூட்டணி அமைந்துள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 144 சட்டசபை தொகுதிகளும், 17 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜனதா கட்சிக்கு 6 நாடாளுமன்ற தொகுதிகளுடன், 10 சட்டசபை தொகுதிகளும், ஜனசேனா கட்சிக்கு 2 நாடாளுமன்ற தொகுதிகளும், 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. வருகிற 13-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆந்திர சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா கூட்டணியின் கூட்டு தேர்தல் அறிக்கை ேநற்று வெளியிடப்பட்டது. அதில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. மேலும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், இந்த தேர்தல் அறிக்கை சூப்பர் சிக்ஸ் போன்றது என்றார்.ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 3 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைக்கு ரூ.15 ஆயிரம் வழங்குவதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory