» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வணிக சிலிண்டர் விலை ரூ.30.50 குறைப்பு : எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 8:19:03 AM (IST)

வணிக சிலிண்டரின் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவன அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் சிலிண்டர்களின் விலை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

வணிக சிலிண்டர்கள் ரூ.1,960.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது அதன் விலை நேற்று மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.30.50 குறைக்கப்பட்டு, ரூ.1,930-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு முறையாக வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையை போன்று, டெல்லி, மும்பை, கொல்கத்தா பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் வணிக சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 3 மாதங்களில் வணிக கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.36 அதிகரித்திருந்த நிலையில், நேற்று ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் கடந்த மகளிர் தினத்தை முன்னிட்டு ரூ.100 குறைக்கப்பட்டது. தற்போது விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1,924.50-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர்களின் எண்ணிக்கை சுமார் 33 கோடியாக உள்ளது. 2025-2026-ம் ஆண்டுக்குள் மேலும் 75 லட்சம் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் வரும் என்று கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்டது. சமீபகாலமாக, மானிய சிலிண்டர்கள் குறித்து அரசு தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory