» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேஜரிவாலுக்கு ஏப்.15 வரை நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்!

திங்கள் 1, ஏப்ரல் 2024 12:38:10 PM (IST)

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து கேஜரிவால் விசாரித்து வந்தார். கேஜரிவாலின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

கேஜரிவாலை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்த நிலையில், ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட கேஜரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற உத்தரவையடுத்து திகார் சிறையில் இன்று அடைக்கப்படுகிறார்.

முன்னதாக, டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, கடந்த செவ்வாய்க்கிழமை திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory