» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இரண்டே நிமிடத்தில் உரையை முடித்த ஆளுநர் : கேரள சட்டசபையில் பரபரப்பு

வியாழன் 25, ஜனவரி 2024 4:32:18 PM (IST)



கேரள சட்டசபை கூட்டத் தொடரில் இரண்டே நிமிடத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையை நிறைவு செய்தார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள அரசுக்கும் கேரள ஆளுநராக உள்ள ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. கேரள மாநில அரசை பொதுவெளியில் ஆரிப் முகமது கான் கடுமையாக விமர்சித்து வருகிறார். தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநருக்கு எதிராக கேரளா அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இதற்கிடையே இந்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,25) துவங்கியது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் துவங்குவது வழக்கம். அதன்படி இன்று காலை ஆளுநர் ஆரிப் முகமது கான், அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தனது உரையை துவங்கினார். 62 பக்கம் கொண்ட கொள்கை உரையின் 136 பத்திகளில், நேரடியாக கடைசி பக்கத்தை திருப்பிய ஆளுநர், ''இப்போது கடைசி பத்தியை படிக்கிறேன்'' எனக் கூறி அதை மட்டும் வாசித்துவிட்டு உரையை முடித்து அமர்ந்தார்.

அதன்பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது; அது முடிந்ததும், ஆளுநர் சட்டசபையை விட்டு வெளியேறினார். இந்த முழு காட்சிகளும் 5 நிமிடங்களுக்குள் நடந்தது. அதிலும் சரியாக 9:02 மணிக்கு உரையை துவக்கிய ஆளுநர் ஆரிப் முகமது கான், 9:04க்கு உரையை முடித்தார். வெறும் இரண்டே நிமிடத்தில் ஆளுநர் உரையை முடித்ததால் சட்டசபையில் பரபரப்பான சூழல் நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory