» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராம்லீலா நிகழ்ச்சியில் அனுமன் வேடமணிந்து நடித்தவர் மேடையிலேயே உயிரிழப்பு

செவ்வாய் 23, ஜனவரி 2024 11:38:58 AM (IST)



அரியானாவில் ராம்லீலா நிகழ்ச்சியில் அனுமன் வேடமணிந்து நடித்துக் கொண்டிருந்தவர் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், திரைப்பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனிடையே, ராமர் கோவில் பிரதிஷ்டையையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அந்த வகையில், அரியானா மாநிலம் பிஹ்வானி நகரில் ராம்லீலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹரிஷ் மேதா என்ற நபர் கடவுள் அனுமன் வேடமணிந்திருந்தார். ராம்லீலா நிகழ்ச்சி இறுதியில் கடவுள் ராமர் வேடமணிந்த நபரின் காலை அனுமன் வேடமணிந்திருந்தவர் வணங்குவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், நிகழ்ச்சியின் நடுவே ஹரிஷ் மேதா மேடையில் நின்றுகொண்டிருந்த ராமர் வேடமணிந்த நபரின் கால் அருகே விழுந்தார். இதனை, நிகழ்ச்சியின் ஒருபகுதி என நினைத்த அருகில் இருந்தவர்கள் ஹரிஷ் மேதாவை எழுப்பாமல் நாடகத்தை தொடர்ந்தனர். சில நிமிடங்களாக ஹரிஷ் மேதா மேடையில் விழுந்துகிடந்ததால் அதிர்ச்சியடைந்த சிலர் அவரை எழுப்ப முயற்சித்தனர். அப்போது, ஹரிஷ் மேதா மயங்கிய நிலையில் இருந்ததால் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஹரிஷ் மேதாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தார். ராம்லீலா நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் நிகழ்ச்சி மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனால், ஹரிஷ் நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டிருக்கிறார் என நினைத்து அவரை அருகில் இருந்தவர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory