» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே திடீர் மோதல் - ஒருவர் தாக்கப்பட்டதால் பரபரப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:37:34 AM (IST)
கோவில்பட்டி அரசு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பொது இடத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகன் மனோஜ்குமார் (21). இவர் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. வரலாறு பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மனோஜ்குமாரின் நண்பரான சக மாணவர் ஒருவருடன் அதே கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனது நண்பருக்கு ஆதரவாக மனோஜ்குமார் பேசியுள்ளார். இதன் காரணமாக அவருக்கும், எதிர்தரப்பு மாணவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மனோஜ்குமார் தனது வீட்டிற்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் இனாம் மணியாச்சி விலக்கு பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்குச் சென்று தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எதிர்தரப்பு மாணவர்கள், திடீரென மனோஜ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அந்த மாணவர் கும்பல் மனோஜ்குமாரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியது.
மாணவர்கள் மோதிக்கொள்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், சத்தமிட்டு அவர்களை விரட்டினர். இத்தாக்குதலில் காயமடைந்த மனோஜ்குமார், உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கல்லூரி மாணவர்கள் பொது இடத்தில் வைத்து சக மாணவரைத் தாக்கிய சம்பவம் கோவில்பட்டி பகுதியில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஏப்.4, 5ல் மாபெரும் பிராண சிகிச்சை முகாம்: அனுமதி முற்றிலும் இலவசம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:39:43 PM (IST)

அரசு டவுன் பஸ் மோதி பெண் உயிரிழப்பு : ஓட்டுநர் கைது - திருச்செந்தூரில் சோகம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:32:04 PM (IST)

தூத்துக்குடியில் கிரேன் கயிறு அறுந்து விபத்து : ஒர்க்ஷாப் அதிபர் மகன் உயிரிழப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:18:24 PM (IST)

விளாத்திகுளத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர் மார்கண்டேயன்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:12:43 PM (IST)

கோவில்பட்டி உள்பட 2 தொகுதிகளில் தமிழ்ப் பேரரசு கட்சி போட்டி: வேட்பாளர்கள் அறிவிப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:07:50 PM (IST)

மத உரிமையைச் சிதைக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:30:14 AM (IST)







