» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கிரேன் கயிறு அறுந்து விபத்து : ஒர்க்ஷாப் அதிபர் மகன் உயிரிழப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:18:24 PM (IST)
தூத்துக்குடியில் ஒர்க்ஷாப்பில் கிரேன் மூலம் இரும்பு பிளேட்டுகளை இறக்கும்போது, எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த இன்ஜினியரிங் ஒர்க்ஷாப் அதிபர் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலை ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கணேசன் (42). இவருக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முருகன், தூத்துக்குடி மச்சாது நகர் பகுதியில் தனது மகன் கணேசனுடன் இணைந்து 'இன்ஜினியரிங் ஒர்க்ஷாப்' நடத்தி வந்தார். இங்கு தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்குத் தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தன.
நேற்று மும்பையிலிருந்து ஒரு கண்டெய்னர் லாரியில் தலா 30 கிலோ எடை கொண்ட இரும்பு பிளேட்டுகள் ஒர்க்ஷாப்பிற்கு வந்திறங்கின. லாரியில் இருந்த இரும்பு பிளேட்டுகளை கிரேன் மூலம் கயிறு கட்டி இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேனின் கயிறு திடீரென அறுந்தது.
இதில், ராட்சத இரும்பு பிளேட்டுகள் கீழே நின்றிருந்த கணேசன் மீது பயங்கரமாக விழுந்தன. இதில் உடல் நசுங்கி பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்துச் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இரும்பு பிளேட்டுகள் இறக்கும்போது பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஏப்.4, 5ல் மாபெரும் பிராண சிகிச்சை முகாம்: அனுமதி முற்றிலும் இலவசம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:39:43 PM (IST)

அரசு டவுன் பஸ் மோதி பெண் உயிரிழப்பு : ஓட்டுநர் கைது - திருச்செந்தூரில் சோகம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:32:04 PM (IST)

விளாத்திகுளத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர் மார்கண்டேயன்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:12:43 PM (IST)

கோவில்பட்டி உள்பட 2 தொகுதிகளில் தமிழ்ப் பேரரசு கட்சி போட்டி: வேட்பாளர்கள் அறிவிப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:07:50 PM (IST)

மத உரிமையைச் சிதைக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:30:14 AM (IST)

தூத்துக்குடியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்: ஆட்சியர் பங்கேற்பு
வியாழன் 2, ஏப்ரல் 2026 10:39:06 AM (IST)







