» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு டவுன் பஸ் மோதி பெண் உயிரிழப்பு : ஓட்டுநர் கைது - திருச்செந்தூரில் சோகம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:32:04 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த திருச்சியைச் சேர்ந்த பெண், அரசு டவுன் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி உறையூர் அழகர் சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (37). இவர் தனது உறவினர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று வந்திருந்தார். கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய சரண்யா, அங்கிருந்து நடந்து கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து கோவில் வாசல் நோக்கிச் சென்ற அரசு டவுன் பஸ், எதிர்பாராதவிதமாகச் சரண்யா மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது, பேருந்தின் முன்பக்க டயர் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சரண்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார், சரண்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரான தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் (59) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து, அங்கிருந்த பிற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஏப்.4, 5ல் மாபெரும் பிராண சிகிச்சை முகாம்: அனுமதி முற்றிலும் இலவசம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:39:43 PM (IST)

தூத்துக்குடியில் கிரேன் கயிறு அறுந்து விபத்து : ஒர்க்ஷாப் அதிபர் மகன் உயிரிழப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:18:24 PM (IST)

விளாத்திகுளத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர் மார்கண்டேயன்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:12:43 PM (IST)

கோவில்பட்டி உள்பட 2 தொகுதிகளில் தமிழ்ப் பேரரசு கட்சி போட்டி: வேட்பாளர்கள் அறிவிப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:07:50 PM (IST)

மத உரிமையைச் சிதைக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:30:14 AM (IST)

தூத்துக்குடியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்: ஆட்சியர் பங்கேற்பு
வியாழன் 2, ஏப்ரல் 2026 10:39:06 AM (IST)







