» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி உள்பட 2 தொகுதிகளில் தமிழ்ப் பேரரசு கட்சி போட்டி: வேட்பாளர்கள் அறிவிப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:07:50 PM (IST)
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி உள்பட 2 தொகுதிகளில் தமிழ்ப் பேரரசு கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் வ.கௌதமன் அறிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் தலைமையிலான தமிழ்ப் பேரரசு கட்சி, வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதன்படி குன்னம் (பெரம்பலூர்) தொகுதியில் வழக்கறிஞர் த. அன்புத்தமிழன் போட்டியிடுகிறார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் வழக்கறிஞர் செ. சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மொழி, நிலம் மற்றும் தமிழர் அதிகாரம் ஆகியவற்றை மீட்டெடுக்கச் சமரசமின்றிப் போராடப் போவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. தற்போதைய திரையிசை மயக்கம் மற்றும் இலவச அரசியலைத் துறந்து, மக்கள் நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனப் பொதுச்செயலாளர் வ.கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு உரிமை மற்றும் நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் முன்னின்ற தங்களது குரல், இனி சட்டமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஏப்.4, 5ல் மாபெரும் பிராண சிகிச்சை முகாம்: அனுமதி முற்றிலும் இலவசம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:39:43 PM (IST)

அரசு டவுன் பஸ் மோதி பெண் உயிரிழப்பு : ஓட்டுநர் கைது - திருச்செந்தூரில் சோகம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:32:04 PM (IST)

தூத்துக்குடியில் கிரேன் கயிறு அறுந்து விபத்து : ஒர்க்ஷாப் அதிபர் மகன் உயிரிழப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:18:24 PM (IST)

விளாத்திகுளத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர் மார்கண்டேயன்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:12:43 PM (IST)

மத உரிமையைச் சிதைக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:30:14 AM (IST)

தூத்துக்குடியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்: ஆட்சியர் பங்கேற்பு
வியாழன் 2, ஏப்ரல் 2026 10:39:06 AM (IST)







