» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் மீது லாரி மோதிய விபத்தில் 3பேர் காயம்: மதுபோதையில் லாரியை இயக்கிய டிரைவர் கைது

வெள்ளி 23, ஜனவரி 2026 5:12:27 PM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே மதுபோதையில் வாகனத்தை இயக்கி காயம் ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலசமுத்திரம் பகுதியில் கடந்த 20.01.2026 அன்று கார் மற்றும் லாரி ஆகிய வாகனங்கள் விபத்துகுள்ளானதில் காரில் வந்த 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திக் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் லாரி ஓட்டுநரான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இர்பானுல்லாபெக் (35) என்பவர் மதுஅருந்திவிட்டு வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில் காரில் வந்த 3 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மதுபோதையில் வாகனத்தை இயக்கி காயம் ஏற்படுத்தியதால் கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் வழக்காக பதிவு செய்து  மேற்படி இர்பானுல்லாபெக்-ஐ காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன்படி வாகனத்தை மதுபோதையில் ஓட்டி ஒருவர் காயம் ஏற்படுத்தினால் கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் வழக்கு பதிவு செய்யப்படும். இக்குற்றத்திற்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.

அதே போன்று வாகனத்தை மதுபோதையில் ஓட்டி ஒருவர் உயிரிழப்பை ஏற்படுத்தினால், கொலை அல்லாத மரணம் வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறான குற்றத்திற்கு நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து தங்களுக்கும், தங்களால் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும், அதனை மீறி இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்  எனவும்  தூத்துக்குடி  மாவட்ட  காவல்  கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory