» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மண்டல கராத்தே போட்டி: நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்கள் சாதனை!!

செவ்வாய் 12, மார்ச் 2024 3:42:57 PM (IST)



மண்டல அளவிலான கராத்தே போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தென் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் தூத்துக்குடி சாண்டி மெட்ரிகுலே ஷன் பள்ளி வளாகத்தில் நடந்தது.போட்டிகளில் மர் காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் "கடா" கராத்தே போட்டிகளில் 9ம் வகுப்பு பிரிவில் ரோஹித் முதலிடமும், ஸ்வீட்டன் இரண்டாம் இடத்தையும் ,8ம் வகுப்பு பிரிவில் ஜெர்வின் இரண்டாம் இடத்தையும் , "குமிட்டே" (சண்டை பிரிவு) கராத்தே போட்டிகளில் 9ம் வகுப்பு பிரிவில் பாலச்சந்தி ரன் முதலிடத்தையும் ,7ம் வகுப்பு பிரிவில் சுதன் கார்த்திக் மற்றும் சித்தார்த் ஆகியோர் முதலிடத்தையும் , 6ம் வகுப்பு பிரிவில் சேர்ம கௌதம், மதன், சேர்மன் ஆகியோர் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது . பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை வகித்தார் .அகில இந்திய கபடி வீரர் அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், உடற்கல்வி ஆசிரியர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சியளித்த கராத்தே மாஸ்டர்கள் டென்னிசன், அருண் ஆகியோரையும் பள்ளி தாளாளர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் , மாணவர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory