» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்குதல் முகாம்

திங்கள் 12, பிப்ரவரி 2024 10:05:11 AM (IST)நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்குதல் மருத்துவ முகாம் நடைபெற்றது.
         
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்குதல் மருத்துவ முகாம் நடைபெற்றது. தேசிய குடற்புழு நீக்குதல் நாளினை முன்னிட்டு, உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. 

மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கொடுத்து முகாமினை துவக்கி வைத்தார்.உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் ஆயிரம் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினர். 

இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். அறிவியல் ஆசிரியரும் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின்  பொறுப்பாளருமான ஜென்னிங்ஸ் காமராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரி யர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory