» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணி!

ஞாயிறு 11, பிப்ரவரி 2024 9:52:19 PM (IST)நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும்  பள்ளி" திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடை பெற்றது.

தலைமையாசிரி யர் கென்னடி வேதராஜ் தூய்மை பணியை துவக்கி வைத்தார். ஆசிரியர் வின்ஸ்டன் ஜோஸ்வா இறைவணக்கம் செய்தார்.  தேசிய மாணவர் படை (என்.சி.சி.) வீரர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் கள், பாரத சாரணர் இயக்க மாணவர்கள், இளையோர் செஞ்சிலுவை சங்க மாண வர்கள், சாலை பாதுகாப்பு படை மாணவர்கள் 250க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். 

பள் ளியின் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. உடற்பயிற்சி கூடம்  சுத்தம் செய்யப்பட்டது. பள்ளியின் வளாகத்தில் இருந்த தேவையற்ற பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள், மரக்கழிவுகள், தேவையற்ற செடிகள் மற்றும் புதர்கள் அகற்றி தூய்மைப்படுத்தப் பட்டன. மாணவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து பள்ளி வளாக தூய்மை பணியில் ஈடுபட்டனர். 

பாரத சாரணர் இயக்க பொறுப்பாசிரியர் ஆபிரகாம் இமானுவேல், இளையோர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் ஜென்னிங்ஸ்  காமராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெய்சன் சாமுவேல், உதவி தலைமை ஆசிரியரும் முன்னாள் தேசிய  மாணவர் படை அலுவலருமான நல்லாசிரியர் விருது பெற்ற ஜெயசீலன் சேகர் டேவிட் , உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் தூய்மைப்படுத்துவதற்கான இடங்களை பள்ளி வளாகத் தில் தேர்வுசெய்து  தூய்மை பணியை ஒருங்கிணைத்து செய்திருந்தனர். தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர் களால் பள்ளி வளாகத்தில் உள்ள பெரிய கால்பந்து மைதானத்தின் தெற்கு பகுதி, கூடைப்பந்து மைதா னம், சிற்றாலயத்தின் அரு காமையில் உள்ள பகுதி கள்,கைப்பந்து மைதானத் தின் அருகாமையில் உள்ள பகுதிகள், சத்துணவு கூட முன்பகுதி, இயற்பியல் ஆய்வகம் ஆகியவை  தூய்மைப்படுத்தப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory