» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நன்னெறி வாழ்க்கைக் கல்வி நிகழ்ச்சி!

வெள்ளி 9, பிப்ரவரி 2024 3:13:34 PM (IST)நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நன்னெறி வாழ்க்கைக் கல்வி நிகழ்ச்சியில் சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளியின் காவல் கண்காணிப்பாளர்  கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நல்லொ ழுக்கமும் நல்வாழ்வும் என் ற தலைப்பில் நன்னெறி வாழ்க்கைக்கல்வி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளியின் காவல் கண்காணிப்பாளர் பிரபா கர் கலந்து கொண்டார். ஆசிரியர் அம்புரோஸ் இறைவணக்கம் செய்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர் சோம் ஜெபராஜ் வரவேற் றார். 

தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலை மை தாங்கினார். உடற் கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர் சிறப்பு விருந்தின ருக்கு நினைவு பரிசு வழங் கிகௌரவித்தார்.சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பேசுகையில், மா ணவர்கள் தங்களது இளம் பருவத்தில் நல்லொழுக்க மிக்கவர்களாக வாழும் பட்சத்தில் எதிர்காலத்தில் நல்வாழ்க்கை அமையப் பெறும் என்று கூறினார். 

நன்கு படித்தல், அதிகாலையில் விழித்தல், ஆசிரியர்க ளுக்கு கீழ்படிதல், போதைப் பொருள்களுக்கு விலகி இருத்தல், 18 வயதுக்கு முன்னர் வாகனங்கள் ஓட்டாதிருத்தல், நீச்சல் பயிற்சி பெறுவது குறித்து எடுத்துரைத்தார். நல்ல கல் வியும், நல்லொழுக்கமும் மாணவர்களை சிறந்தவர்க ளாக உருவாக்கும் என்றார். 

உடற்கல்வி ஆசிரியர் தனபால் நன்றி கூறினார். தமிழ் ஆசிரியர் வின்ஸ்டன் ஜோஸ்வா நிகழ்ச்சியை இ றைவணக்கத்தோடு நிறை வுசெய்தார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிற் கல்வி ஆசிரியர் ஜெய்சன் சாமுவேல் மற்றும் அறிவி யல் ஆசிரியர் ஜெனிங்ஸ்  காமராஜ் ஆகியோர் செய் திருந்தனர். நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் செய்து காண்பிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு படை, சாரணர் இயக்கம் மற்றும் கராத்தே அணி வீரர்களும் மற்ற மாணவர்களும் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory