» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

வேப்பலோடை அரசுப்பள்ளியில் பசுமை அடர்வனம்: மண்பரிசோதனை மண் எடுக்கும் நிகழ்ச்சி!

சனி 3, பிப்ரவரி 2024 4:32:00 PM (IST)வேப்பலோடை அரசுப்பள்ளியில் பசுமை அடர்வனம் உருவாக்கத்திற்கு மண்பரிசோதனை மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளிகளில் பள்ளி கல்வித்துறையோடு இணைந்து தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் "பள்ளி பசுமை அடர்வனம்" உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. 

அதற்காக வேப்பலோடை மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மண் பரிசோதனை செய்து மண்ணுக்கேற்ற மரங்களை நடவு செய்து பள்ளி பசுமை அடர்வனம் உருவாக்கத்திற்கு, மண்பரிசோதனை செய்வதற்காக மண் எடுக்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி. சேகர் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் ஜாய்பிரியா, பள்ளிப் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்  இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

சிறப்பு விருந்தினராக  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறவனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உருப்பினருமான எம்.ஏ.தாமோதரன் கலந்து கொண்டு மண் எடுக்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து மண்ணை சேகரித்தார். இதில் பள்ளி பசுமைப்படை மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory