» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாவட்ட அளவிலான கபடி போட்டி: நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

வியாழன் 1, பிப்ரவரி 2024 8:15:14 PM (IST)மாவட்ட அளவிலான கபடி போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கரையடியூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. 30_க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். 2007 ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களுக்கான பிரிவில் கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று 3வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். 

சாதனை படைத்த மாணவர்களுக்கு மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குனர் பெலின்பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித்செல்வ சுந்தர் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஆகியோரையும் பள்ளி தாளாளர் சுதாகர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் , அலுவலர்கள் பாராட்டினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory