» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் 62ஆவது பட்டமளிப்பு விழா

சனி 9, டிசம்பர் 2023 3:31:44 PM (IST)



தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில்  62 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 09.12.2023 சனிக்கிழமையன்று தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கீழ்  2018-2020, 2019-2021, 2020-2022 கல்வியாண்டுகளில் பயின்ற ஆசிரிய மாணவியருக்கு 62 ஆவது பட்டமளிப்பு விழா சுப்பையா தர்மநிதியின் அறங்காவலர் செ. கௌதமன் மற்றும் கல்லூரி செயலர் முரளிதரன் ஆகியோர் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா அனைவரையும் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுகுமார் 187 மாணவ ஆசிரியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory