» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கருத்தரங்கு!

புதன் 11, அக்டோபர் 2023 5:34:41 PM (IST)



தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் சர்வதேச பெண் குழந்தைகள் தின சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. 

பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், அவர்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பது,அவர்களது சாதனைகளை அங்கீகரிப்பதை வலியுறுத்தி ஆண்டு தோறும் ஐ. நா., சார்பில் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண்குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களின் உண்மையான திறனை வெளிக்கொணர உதவுவது தான் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதனையொட்டி மதர் தெரசா பொறியியல் கல்லூரியின் பெண்கள் அதிகாரமளிக்கும் மையத்தின் சார்பில் பெண்களுக்கு சட்ட உரிமை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் மற்றும் இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் தலைமை தாங்கினார்கள். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மகிளா நீதி மன்ற முன்னாள் பப்ளிக் புராசியூட்டர், உறுதிமொழி ஆணையரான வழக்கறிஞர் சுபாஷினி வில்சன் மற்றும் பியரல் சிட்டி ரோட்டரி கிளப் செயலாளர் ஆயிஷா பர்வீன் ஆகியோர் பங்கேற்ற்றனர். 

இந்நிகழ்வில் பேசிய சுபாஷினி வில்சன், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, சட்டத்தில் பெண்களுக்கான உரிமை குறித்து விரிவாக பேசினார்.  இந்நிகழ்வில் பேராசிரியர்கள், அனைத்து துறை மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை பெண்கள் மைய ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் சியாமளா மற்றும் கல்லூரி நிர்வாக அலுவலர் விக்னேஷ் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory