» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புறையூர் நடுநிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கடைபிடிப்பு

சனி 9, செப்டம்பர் 2023 9:58:09 AM (IST)



புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் செப்.8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டிற்கான கருப்பொருள் நிலையான அமைதியான உலகத்தை உருவாக்குதல், எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் என்ற  தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் குரும்பூர் அருகே உள்ள புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 

இதையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் எழுத்தறிவு தின லோகோ வடிவில் அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ் நியூமன், துணை தலைமையாசிரியை பெல்சியா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory