» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா

வியாழன் 7, செப்டம்பர் 2023 4:21:56 PM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது.

நாடு முழுவதும் செப்டம்பர் 1ம்தேதி முதல் 7ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டு சிறுதானிய ஆண்டாககொண்டாடப்படுகிறது. கோவில்பட்டி அரசு பள்ளியில் நடந்த உணவு திருவிழாவில் தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் முன்னிலை வகித்தார்.மனையியல் பிரிவு ஆசிரியர் அன்னமரியாள் வரவேற்றார்.

பள்ளி சத்துணவியல், மனையியல் பிரிவு மாணவிகள் குதிரைவாலி, கம்பு, சோளம், கேழ்வரகு, பனிவரகு, கொள்ளு, எள்ளு, திணை, சாமை, உள்ளிட்ட சிறுதானியங்களிலிருந்து பொங்கல், வடை, உப்புமா, பணியாரம், சாத வகைகள், பாயாசம், கொழுக்கட்டை, இட்லி, தோசை, பக்கோடா, புட்டு, முளை கட்டிய தானியங்கள், அல்வா, லட்டு, அதிரசம், பிரியாணி, 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை செய்து அசத்தினர்.

கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ஜெயக்குமார் அலைபேசி வாயிலாக பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியை உஷா ஷோஸ்பின், உடற்கல்வி இயக்குனர் காளிராஜ், உள்பட மனையியல், சத்துணவியல் பிரிவு மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory