» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

உலக எழுத்தறிவு தின இலச்சினை வடிவில் அணிவகுத்து நின்ற பள்ளி மாணவர்கள்!!

வியாழன் 7, செப்டம்பர் 2023 3:50:03 PM (IST)



கோவில்பட்டி  நாடார் நடுநிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு எழுத்தறிவு தின லோகோ வடிவில் பள்ளி மாணவர்கள் அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உலக நாடு முழுவதும் செப்டம்பர் 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டிற்கான கருப்பொருள் நிலையான அமைதியான உலகத்தை உருவாக்குதல் எழுத்தறிவின் முக்கியதுவத்தை எடுத்துரைத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தின் அவசியத்தை எடுத்து கூறும் வகையில் அனைவரும் எழுதப் படிக்க வாருங்கள் என்று கூப்பிடுவதைப்போல் அறிவொளி இயக்க இலச்சினை வடிவில் நின்று மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன்,ரோட்டரி சங்க பப்ளிக் இமேஜ் தலைவர் முத்து முருகன்,பள்ளி தலைமையாசிரியை செல்வி, உடற்கல்வி ஆசிரியர் ஆகாஷ்,ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், கணேசன், அருணா,ஜெயலட்சுமி, பிருந்தாதேவி, டாபின் மேரி, ஜோதி, உண்ணாமலைதாய், ஷீபாராணி,உள்பட மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory