» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மொயின் அலி, ஜடேஜா அசத்தல்: ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை அணி

செவ்வாய் 20, ஏப்ரல் 2021 10:53:30 AM (IST)மொயின் அலி, ஜடேஜாவின் சிறப்பான பந்துவீச்சால்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. சென்னை அணியினர் நேர்த்தியாக பந்து வீசி அசத்தினர். அதனால் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் விழுந்தது. கடைசி கட்டத்தில் ராகுல் டெவாட்டியாவும், ஜெய்தேவ் உனத்கட்டும் போராடினர். இருவரும் இணைந்து 42 ரன்கள் சேர்த்தனர். டெவாட்டியா 20 ரன்னில் அவுட்டானார். உனத்கட் 24 ரன்னில் வெளியேறினார்.இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று நிகர ரன்ரேட் அடிப்படையில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் 2 தோல்விகள், ஒரு வெற்றியுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி பங்கேற்ற 200வது போட்டி அவருக்கு மறக்கமுடியாத வெற்றியை அளித்துள்ளது

சிஎஸ்கே அணியில் எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. அதிகபட்சமாக 35 ரன்கள் கூட சேர்க்கவில்லை, ஆனால், ஸ்கோர் 188 ரன்கள் வந்துவிட்டது என்பது ராஜஸ்தான் அணிக்கும் சற்று வியப்பாகவே இருந்திருக்கும். அணியில் உள்ள தாக்கூர், ஜடேஜா தவிர்த்து மீதமுள்ள 8 பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களில்தான் ஆட்டமிழந்துள்ளனர். இந்த கூட்டுமுயற்சிதான் ஸ்கோர் உயர்வுக்குக் காரணம். டி20 வரலாற்றிலேய ஒரு அணியில் பேட்ஸ்மேன்கள் யாரும் 35 ரன்களுக்கு மேல் அடிக்காமல் அதேநேரம் அதிகபட்ச ஸ்கோர் குவித்தது இது 5-வது முறையாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesNalam Pasumaiyagam

Thalir Products
Thoothukudi Business Directory