» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோற்றாலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!!

வெள்ளி 19, ஏப்ரல் 2024 12:28:45 PM (IST)



ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வென்றது.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 19.1 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பஞ்சாப் அணி வீரர் ஆசுதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் அடித்து மும்பைக்கு பயத்தை காட்டினார். இதில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் பும்ராவின் யார்க்கர் பந்தினை ஸ்வீப் ஷாட் அடித்தார். இந்த சிக்ஸரை குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பஞ்சாப் அணிக்கு ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர் விளையாடிய நான்கு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார். 4 போட்டிகளில் 156 ரன்கள் 205 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். சராசரி 52 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசுதோஷ் சர்மாவின் ஐபிஎல் இன்னிங்ஸ்:

குஜராத் அணிக்கு எதிராக 31 (17)

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 33* (15)

ராஜஸ்தான் அணிக்கு எதிராக 31 (16)

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 61 (28)


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory