» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டிவில்லியர்ஸ் பார்மில் இருந்தால் எதிர் அணியால் கட்டுப்படுத்த முடியாது விராட் கோலி

திங்கள் 19, ஏப்ரல் 2021 8:29:18 AM (IST)டிவில்லியர்ஸ் பார்மில் இருந்தால் அவரை எதிர் அணியால்  கட்டுப்படுத்த முடியாது என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கூறினார்.

ஏடி டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் சென்னையில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 10-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்தது. 205 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய கொலக்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது: மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோர் அற்புதமாக ஆடினர். டிவில்லியர்ஸ் பார்மில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம். வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் நாங்கள் 40 ரன்கள் கூடுதலாக எடுத்ததாக நினைக்கிறேன் என தெரிவித்தார்.

தோல்வி அடைந்த கொல்கத்தா கேப்டன் மோர்கன் கூறுகையில், நாங்கள் நினைத்ததை விட ஆடுகளம் நன்றாக இருந்தது. பேட்டிங்கில் இது பெங்களூரு அணிக்குரிய நாளாக அமைந்தது. சென்னை ஆடுகளம் என்னை திகைக்க வைக்கிறது. ஆடுகள தன்மையை கணிப்பது கடினமாக உள்ளது. சென்னையை விட்டு கிளம்பி இனி அடுத்த இடத்தில் விளையாட இருப்பது மகிழ்ச்சியே என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory