» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவையை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் 102- இலவச தாய்சேய் ஊர்தி சேவையில் முதல் முறையாக பெண் வாகன ஓட்டுநர் நியமிக்கப்பட்டு சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் இன்று (12.6.2026) தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 வாகனங்களும், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு 1 வாகனமும் என மொத்தம் 3 இலவச தாய்சேய் ஊர்தி வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சேவை 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை அவர்களது வீடுகளுக்கு பாதுகாப்பாகவும் இலவசமாகவும் அழைத்துச் சென்று சேர்க்கும் சேவையை இவ்வாகனங்கள் வழங்கி வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
பாலூட்டும் தாய்மார்களின் தேவைகள் மற்றும் மகளிரின் பாதுகாப்பு, வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் முறையாக விஷ்வாமேரி என்ற பெண் வாகன ஓட்டுநர் 102-தாய்சேய் ஊர்தி சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இயக்கும் வாகனத்தினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் சேவையை தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டில் மட்டும் தாய்சேய் ஊர்தி சேவையின் மூலம் 8,281 தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், தாய்மார்களுக்கு கூடுதல் நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வகையிலும் இந்த முயற்சி அமைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, இணை இயக்குனர் மருத்துவ நலப் பணிகள் லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அனிதா, 108 சேவை மாநில மருத்துவமனை தொடர்பு அலுவலர் இளைய பாரி, மாவட்ட மேலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாராசிட்டமால் சிரப்பில் ஆல்கஹால் அளவு குறித்து வதந்தி: பொது சுகாதாரத்துறை அறிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 11:13:35 AM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

கோவை, பொள்ளாச்சி, பழனி வழியாகத் திருச்செந்தூர் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 10:42:36 AM (IST)

அனுமதியின்றி வெளிநாட்டுப் பயணம்: அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு விளக்க நோட்டீஸ்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:10:22 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)

சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)








