» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில், குடிநீர் குழாய் உடைப்பைச் சரிசெய்வதற்காகத் தோண்டப்பட்ட பள்ளம் கடந்த ஒரு மாதமாகச் சீரமைக்கப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நோயாளிகள், அவசரச் சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அனந்தன்பாலம் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சரி செய்வதற்காக மாநகராட்சி சார்பில் பெரிய பள்ளம் ஒன்று தோண்டப்பட்டது.
உடைப்பு சரிசெய்யப்பட்ட பின்னரும், தோண்டப்பட்ட பள்ளத்தைச் சீரமைத்துச் சாலையை மூட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் இந்த வழியே வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயமும் நீடிக்கிறது.
இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பணியில் அலட்சியமாக இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாராசிட்டமால் சிரப்பில் ஆல்கஹால் அளவு குறித்து வதந்தி: பொது சுகாதாரத்துறை அறிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 11:13:35 AM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

கோவை, பொள்ளாச்சி, பழனி வழியாகத் திருச்செந்தூர் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 10:42:36 AM (IST)

அனுமதியின்றி வெளிநாட்டுப் பயணம்: அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு விளக்க நோட்டீஸ்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:10:22 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)

சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)








