» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்களா? நோ கமெண்ட்ஸ் எனக் கூறிப் புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்!

சனி 4, ஏப்ரல் 2026 9:39:21 PM (IST)

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தனது திரைப்படங்களின் தற்போதைய நிலவரம் மற்றும் தேர்தல் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' படம் குறித்துப் பேசுகையில், "ஜெயிலர் 2 படத்திற்கான படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும், உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என உறுதிப்படுத்தினார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினி - கமல் கூட்டணி இணையுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் தொடர்பான கேள்விகளும் அவரிடம் முன்வைக்கப்பட்டன. "தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்களா?" என்ற கேள்விக்கு, "நோ கமெண்ட்ஸ்" என்று சுருக்கமாகப் பதிலளித்துத் தவிர்த்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், "தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று கேட்டபோது, அவர் எவ்விதப் பதிலும் கூறாமல் கைகூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory