» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா... பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!

சனி 4, ஏப்ரல் 2026 10:44:09 AM (IST)



நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ரஜினி படப் பாடலைப் பாடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

"ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வார். ஆனால், எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் செய்ய மாட்டார், சொந்தமாகவும் எதையும் செய்ய மாட்டார் என்று மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர். இந்தத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு 11-வது தோல்வி 'ஸ்டிக்கரை' ஒட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்.

இந்தத் தேர்தல் களத்தில் உண்மையான 'சூப்பர் ஸ்டார்' யார் தெரியுமா? 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. தி.மு.க தேர்தல் அறிக்கைன்னு சின்னக் குழந்தையும் சொல்லும்' என ஒரு பாட்டே இருக்கிறது" என்று கூறிய முதல்வர், அந்த வரிகளை மேடையில் பாடலாகப் பாடி அசத்தினார்.

திடீரென ரஜினி படப் பாடலை முதல்வர் பாடியதும், கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் உற்சாக மிகுதியில் கைதட்டி ஆர்ப்பரித்தனர். திமுகவின் தேர்தல் அறிக்கையே இந்தத் தேர்தலின் கதாநாயகன் என்பதை அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.


மக்கள் கருத்து

ரஜினி ரசிகன்Apr 4, 2026 - 03:52:06 PM | Posted IP 172.7*****

அப்போ ரஜினி என்ன ஸ்டார் சொல்லுங்க ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory